தமிழ்நாடு

வீரத்தம்பதிகளிடம் நகை பறித்த கொள்ளையர்கள்-50 நாட்களாகியும் கொள்ளையர்கள் சிக்கவில்லை

நெல்லை மாவட்டம் கடையத்தில் வீர‌த்தம்பதிகளிடம் நகை பறித்த முகமூடி கொள்ளையர்களை பிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்த கல்யாணி புரத்தில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினரிடம் இருந்து 35 கிராம் நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர். அவர்களை தம்பதியினர் விரட்டி அடித்த நிகழ்வை அறிந்த அரசு அவர்களுக்கு விருது வழங்கியது. அனைத்து துறையினரும் பாராட்டினார்கள். இந்த சம்பவம் நடந்து 50 நாட்களாகியும் இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை. 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் கொள்ளையர்கள் குறித்தும் கொள்ளைக்கான காரணம் குறித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை தனிப்படை போலீசார் பல முறை ஆலோசணை நடத்தியும் விசாரணையை பல்வேறு கோணங்களில் விரிவு படுத்தியும், மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன‌ளிக்கவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சிசிடிவி காட்சிகளில் கொள்ளையர்கள் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தும் குற்றவாளிகள் குறித்து துப்பு துலங்காத‌து, போலீசாருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத வழக்குகளின் பட்டியலில் இந்த வழக்கும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் நெல்லை மாவட்ட மக்களிடம் உள்ளது.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்