தமிழ்நாடு

பாலியல் தொழில்.. வாய்விட்ட திருநங்கைகள்.. அரை நிர்வாணமாக அடித்து ஓடவிட்ட நெல்லை போலீஸ்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே போலீசாரை கண்டித்து காவல்நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள் மீது தடியடி நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்கிணறு பணகுடிக்கு இடையே நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை திருநங்கைகள் சிலர் வழிமறித்து, பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று திருநங்கைகளை செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் மது போதையில் இருந்த சில திருநங்கைகள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த‌தோடு, தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போலீசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் மீது, ஆபாசமாக பேசியும், கற்களை வீசியும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், லத்தியால் திருநங்கைகளை அடித்து கலைத்தனர். இதனால், காவல்நிலையம் வளாகம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

BREAKING || "தமிழக அரசின் செலவிலேயே.." வியட்நாம் கோர செய்தி கேட்டதும் களத்தில் இறங்கிய அதிகாரிகள்

Breaking | Vietnam Boat Accident | "தேசம் துணையாக இருக்கும்" | ஜனாதிபதி இரங்கல்

BREAKING || Janaki | பிரபல பாடகி எஸ்.ஜானகி காலமானார்

Vietnam Tragedy | உயர்ந்த பலி எண்ணிக்கை | தமிழ்நாட்டையே கண்ணீரில் மூழ்கடித்த வியட்நாம் கோரம்

🔴LIVE : Vietnam Tragedy | வியட்நாமில் பலியான தமிழர்கள் யார் யார்? வெளியான விவரங்கள்