தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெல்லையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு சார்பில் கரும்பு மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது. தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வுகள் பிரசுரம் வழங்கப்பட்டது.