தமிழ்நாடு

உணவின்றி உயிருக்கு போராடிய முதியவர்.. ஸ்பாட்டில் போலீசார் செய்த தரமான செயல்.. நெல்லையை கலக்கிய காவல் அதிகாரி

தந்தி டிவி

ரோஸ்மியாபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் முதியவர் ஒருவர் உயிருக்கு போராடி வருவதாக பணகுடி காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மலை அடிவாரத்திற்கு விரைந்த போலீசார், முதியவரை மீட்டு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ்-ஐ அழைத்தனர். ஆனால் முதியவர் கிடக்கும் இடத்திற்கு ஆம்புலன்ஸ் வர வழி இல்லை. இதனால், வேஷ்டியில் முதியவரை படுக்க வைத்து, இருபுறமும் போலீசார் பிடித்துக் கொண்டு சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரம் வரை காட்டிற்குள் இருந்து வெளிப்புற சாலை வரை தூக்கிச் சென்றனர். பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றி அவரை பணகுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மீட்கப்பட்ட முதியவரின் விவரங்கள் அறிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், துரிதமாக முதியவரை மீட்ட போலீசாரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்