தமிழ்நாடு

மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே வெடித்த மோதல் - நடந்தது என்ன?

தந்தி டிவி

திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று உணவு வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் போது கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. நெல்லையை சேர்ந்த பேரின்பராஜ் என்ற கைதிக்கும், முக்கூடல் அரியநாயகிபுரத்தை சேர்ந்த மணிகண்டன், ராஜகோபால், விக்னேஷ் என்ற சிறைவாசிகளுக்கு இடையே யார் முதலில் உணவு வாங்குவது என்ற அடிப்படையில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். இதைப்பார்த்த சிறை வார்டன்கள் ஓடி வந்து கைதிகளை சமாதானப்படுத்தி உள்ளனர். சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த சிறைத்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சிறைவாசிகள் பேரின்பராஜ் உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Heavy Rain | Kovai | "நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.." கோவை ஆட்சியர் அறிவிப்பு

College | TN Rains | நாளை விடுமுறை.. கொடைக்கானல்அரசு கலைக் கல்லூரி அறிவிப்பு

School Leave | TN Rains | Dindigul | "பள்ளிகளுக்கு விடுமுறை.." திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு

Cyclone Alert | திசையை மாற்றி `ரூட்’ எடுத்த சிஸ்டம் - நாளை காலையே.. ஸ்பாட் காட்டும் மேப்

Kovai Rain | தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவையில் சூறையாட்டம் ஆடிய மழை