தமிழ்நாடு

ஒட்டப்பிடாராம் தொகுதி : பராமரிப்பின்றி காணப்படும் நினைவு மண்டபங்கள்...

நெல்லை மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 19 ஆம் தேதி, இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அத்தொகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்ப்போம்.

தந்தி டிவி

இந்திய சுதந்திர போராட்டம் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், நெல்லை மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன், அவரது படைத்தளபதிகளான ஊமைத்துரை, சுந்தரலிங்கம் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த பெருவணிகர் வ.உ.சி.சிதம்பரனார் ஆகியோரின் பங்கு அளப்பரியது. இத்தகைய தலைவர்களின் நினைவு மண்டபங்கள் பாஞ்சாலங்குறிச்சி, கவர்னகிரி ஆகிய பகுதிகளில் உள்ளது.

இந்த நினைவு மண்டபங்களுக்கு செல்லும் சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் சரியாக இல்லை என்பதே மக்களின் புகார் வீரன் சுந்தரலிங்கனார் நினைவு மண்டபத்தை பராமரிக்க, பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு.

இதே போல வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை மற்றும் நினைவு மண்டபத்தை சுற்றுலாத்தலமாக மாற்றி, நிதி ஒதுக்கியும், பணிகள் மந்த நிலையில் உள்ளது என்பதும் மக்களின் புகார் ஆகும். நினைவு சின்னங்களை ஒன்றிணைத்து ஒரு பாரம்பரிய சுற்றுலாத்தலமாக மாற்றினால் அப்பகுதி மக்களின், வாழ்வாதாரம் மேம்படும் என்பதும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இதேபோல கட்டபொம்மன் காலத்தில் நடைபெற்ற போர் நினைவு சின்னங்களான பீரங்கி குண்டுகள் பதுங்கு கிடங்கு, ஆங்கிலேயர்களின் கல்லறைகள் ஆகியவையும் பராமரிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோள் ஆகும்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி