நெல்லையில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிபெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23 ம் தேதி படுகொலை செய்யபட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை கைது செய்தனர்.
இதையடுத்து நள்ளிரவில் அவரை, நெல்லை மாவட்ட 5 வது குற்றவியல் நீதிதுறை நடுவர் நிசாந்தினி வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, கார்த்திகேயன் பாளையாங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.