தமிழ்நாடு

முன்விரோதம் காரணமாக கொலை வன்மம் - ஜாமினில் வந்த சகோதரர்கள் வெறியாட்டம்

நெல்லை அருகே ஒரே குடும்பத்தில் மற்றொருவரை கொல்ல முயன்ற இளைஞர், கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்​தி உள்ளது.

தந்தி டிவி

நெல்லை அருகே ஒரே குடும்பத்தில் மற்றொருவரை கொல்ல முயன்ற இளைஞர், கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்​தி உள்ளது. கல்லிடைக்குறிச்சி அடுத்த செங்குளத்தில், திருவிழா தகராறு தொடர்பாக கண்ணன் என்பவரின் மகன் விஜயை, அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கண்டித்துள்ளார். இந்த விவகாரத்தில், விஜய், அவரது அண்ணன்கள் வினோத், விகாஸ் உள்ளிட்டோர், 2016ஆம் ஆண்டு தேர்தல் நாளில் ரவிச்சந்திரனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கில் சிறை சென்றவர்கள் அனைவரும் , தற்போது ஜாமீனில் வந்துள்ளனர். வாகைகுளத்துக்கு குடிபெயர்ந்த அவர்கள், சிறை செல்ல காரணமாக இருந்த ரவிச்சந்திரன் குடும்பத்தைச் சேர்ந்த சிவபிரவீனை நேற்று துரத்தியுள்ளனர். அவர் சொந்த ஊரான செங்குளத்துக்குள் சத்தமிட்டவாறு நுழைந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள், கொலையை தடுக்க கற்களால் அடித்த நிலையில், விஜய் உயிரிழந்தார். அண்ணன் விகாஸ் காயமடைந்தார். விஜயின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்