தமிழ்நாடு

நெல்லை தாய் - சேய் உயிரிழப்பு : அறிக்கை அளிக்க - சுகாதாரத்துறைக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் இறந்தது தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை அளிக்க, சுகாதார துறைக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்த அகிலா, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. இதில் தாயும், குழந்தையும் இறந்துள்ளனர். இதுசம்பந்தமாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்