தமிழ்நாடு

மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு - திமுக பிரமுகர் சீனியம்மாளுக்கு நிபந்தனை ஜாமீன்

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உட்பட மூவர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாளுக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரின் கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் ஆகிய மூவரையும் கடந்த ஜூலை மாதம் திமுக பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயன் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சீனியம்மாள் மற்றும் அவரின் கணவர் சன்னாசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கார்த்திகேயன் கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்த நிலையில், உடல் நிலையை கருத்தில் கொண்டு தனக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என சீனியம்மாள் மனுத்தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, சீனியம்மாளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்