கடந்த ஜூலை 23 ஆம் தேதி நெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர், பணிப்பெண் ஆகிய 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புள்ளதாக, கார்த்திகேயனின் தாயாரும் திமுக பிரமுகருமான சீனியம்மாளையும் அவரது கணவர் சன்னாசியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி இருந்தால் தனக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது என்பதால் அவரை தனது மகனை வைத்தே கொலை செய்ததாக சீனியம்மாள் வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.