கொரோனா தொற்றால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில், நெல்லையின் டவுன் நயினார்குளம் காய்கறி சந்தை டவுன் சாப்டர் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் முகக் கவசம் கட்டாயம் என அரசால் அறிவிக்கப்பட்டும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் முகக் கவசம் அணியாமல் காய்கறி சந்தைக்கு வந்திருந்தனர். இதனால் காய்கறி வியாபாரிகள் அவர்களுக்கு காய்கறி வழங்காமல் திருப்பி அனுப்பினர். தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இலவசமாக முகக் கவசமும் வழங்கப்பட்டன.