தமிழ்நாடு

முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் காலமானார் - ஏராளமானோர் அஞ்சலி

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77

தந்தி டிவி
நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77. கடந்த 1941-ம் ஆண்டு கடலங்குடியில் பிறந்த அவர், சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் தொல்காப்பிய களஞ்சியம், தமிழ் மக்கள் வரலாறு மற்றும் சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை போன்றவை அடங்கும். இவர் தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசை 3 முறை பெற்றுள்ளார். கடந்த 1986-ம் ஆண்டில் சிறந்த​பேராசிரியர்களுக்கான விருதையும் அவர் பெற்றுள்ளார். நீண்ட காலமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த க.ப. அறவாணன் இன்று அதிகாலை காலமானார். சென்னை அமைந்தகரை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிசடங்கு நாளை நடைபெறுகிறது. அறவாணன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு