கன மழைக்கு நெல்லை, பேட்டை திருத்து பகுதியை சேர்ந்த ஆறுமுக்கனி என்பவரது வீடு இடிந்து விழுந்தது. ஆறுமுக்கனி அருகே உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றதால் உயிர் சேதம் தவிர்க்கபட்டது. அதேபோல், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் என்பவரது வீடும் கனமழைக்கு இடிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த லெட்சுமணன் மற்றும் அவரது மகன் மாரியப்பன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.