தமிழ்நாடு

முறை தவறி காதலித்த சித்தப்பா...தூக்கில் தொங்கிய அண்ணன் மகள் - நெல்லையில் பயங்கரம்

தந்தி டிவி

அண்ணன் மகளை முறைதவறி காதலித்து.... இளைஞர் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில், திருமணமான ஒரு வருடத்திலே தம்பதி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் உவரி ராஜா தெருவை சேர்ந்தவர் பிரபாகர். இவரது தந்தைக்கு இரு தாரங்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில், முதல் தாரத்திற்கு பிறந்த அண்ணன் மகளை பிரபாகர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இளைஞரின் முறை தவறிய காதலை, இரு வீட்டாரும் எதிர்த்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் திசையன்விளையில் தனியே வசித்து வந்த நிலையில், பிரபாகர் வேலைக்கு ஏதும் செல்லாமல் மதுபோதைக்கு அடிமையானதால் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், 18 வயது இளம் பெண்ணான பிரபாகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மனைவி இறந்த விரக்தியில் இருந்த பிரபாகர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரபாகரின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்