தமிழ்நாடு

குடிநீர் பைப்லைன் அமைக்க எதிர்ப்பு.. போராட்டத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி - நெல்லையில் பரபரப்பு

தந்தி டிவி

அலவந்தான்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிக்கோட்டை, திருத்து உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுவான கிணறு ஒன்று அமைக்கப்பட்டு அதில் இருந்து தனித்தனியாக பைப் லைன் ஏற்படுத்தி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அலவந்தான்குளம் கிராமத்தில் மக்கள் தொகை அதிகரித்ததால் கூடுதலாக குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தங்கள் கிராமத்திற்கு விநியோகிக்கப்படும் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படும் எனக் கூறி பள்ளிக்கோட்டை மற்றும் திருத்து ஆகிய கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போராட்டத்தின் போது மயங்கி விழுந்த மூதாட்டியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்