“டவர் இருக்கு - சிக்னல் இல்லை“ - குமுறும் மக்கள்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கஸ்தூரிரெங்கபுரம், முடவன்குளம், புதுகுறிச்சி,ஆமையடி, கைலாச பேரி உள்ளிட்ட 8 கிராமங்களில் தொலைதொடர்பு சிக்னல் இல்லாமல் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த கிராம பஞ்சாயத்தில் பி.எஸ்.என்.எல் 5ஜி டவர் இருந்தும் சிக்னல் கிடைக்கவில்லை என கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக தெரிவிக்கும் கிராம மக்கள், பி.எஸ்.என்.எல் டவரை இயக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.