தமிழ்நாடு

போலீசாரிடம் வாரண்ட் கேட்ட நடத்துனர் : நடத்துனரை சரமாரியாக தாக்கிய காவலர்கள் 2 பேர் கைது

நெல்லையில் நடத்துனரை சரமாரியாக தாக்கிய ஆயுதப்படை போலீசார் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆயுதப்படை போலீசார் 2 பேர் கைதிகளை அரசு பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் டிக்கெட் எடுக்குமாறு நடத்துனர் கூறியுள்ளார். உடனே, கைதிகளை அழைத்துச் செல்வதாக கூறி, டிக்கெட் எடுக்க போலீசார் மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வாரண்டை கேட்டதால், காவலர்கள் தமிழரசன், மகேஷ் ஆகியோர், நடத்துனர் ரமேஷை கடுமையாக தாக்கியுள்ளனர்.

நடத்துனர் ரமேஷை, நெல்லை ஆயுதப்படை காவலர்கள் தாக்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலர்கள் மகேஷ், தமிழரசனை கைது செய்துள்ளனர். காயமடைந்த அரசு பேருந்து நடத்துனர் ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அண்மைக்காலமாக பயணச்சீட்டு எடுக்க சொல்லும் பேருந்து நடத்துனர்களை போலீசார் தாக்குவது தொடர்கதையாக மாறி வருவதாக போக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்