தமிழ்நாடு

கணவன் இறந்த கருணையில் கிடைத்த வேலை...சொத்துக்களை சேர்த்து குவித்த பெண் அதிகாரி - திடீர் ரெய்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்

தந்தி டிவி

அம்பை அருகே, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறி, சார் பதிவாளர் அலுவலகத்தின் பெண் ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.நெல்லை மாவட்டம் அம்பை சங்கரயா தெருவை சேர்ந்தவர் வேலம்மாள். 54 வயதான இவர், விக்கிரமசிங்கபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக வேலம்மாள் மீது புகாரளிக்கப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், திடீரென அவரது வீட்டில் போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனையில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வேலம்மாளின் கணவர் சார் பதிவாளர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்ததும், அவர் உயிரிழந்ததால் கருணையின் அடிப்படையில் வேலம்மாளுக்கு அரசுப் பணி கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான தனது பணிக் காலத்தில், சுமார் 45 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் சொத்துக்கள் குவித்ததாக தொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலே இந்த சோதனையானது நடைபெற்றுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்