தமிழ்நாடு

இர்பாஃனின் தந்தை ஷபி போலி மருத்துவர் - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேடப்படும் மருத்துவ மாணவர் இர்பானின் தந்தை மருத்துவரே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

தந்தி டிவி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் உதித் சூர்யா தொடங்கி அடுத்தடுத்து பலரும் சிக்கி வருகின்றனர். வெங்கடேசன், பிரவீன், ராகுல் உள்ளிட்டோர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், ஆள் மாறாட்ட மாணவன் இர்பானின் தந்தை ஷபியை பிடித்து, சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். தனியாக மருத்துவமனை நடத்திவரும் ஷபி, தற்போது மருத்துவரே இல்லை என்றும், மற்ற மருத்துவர்களை வைத்து, மருத்துவமனை நடத்தி வருவதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு ஆள் மாறாட்டத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஷபியின் இந்தத் தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தாம், மருந்தகத்தை மட்டுமே பார்த்து வந்ததாகவும், அவ்வப்போது, மருத்துவம் பார்ப்பதாகவும் கூறியுள்ள அவர், 1989​ மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் மருத்துவ படிப்பை பாதியில் கைவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பெரம்பூர் தொகுதியில் CM விஜய்யின் இன்றைய பிளான் CM Vijay | Perambur |

Perambur | CM Vijay | பெரம்பூர் நோக்கி.. பிரச்சார வாகனத்தில் புறப்பட்டார் CM -ஆர்ப்பரிக்கும் மக்கள்

"2025 இதே நாள் விஜய்க்கு போராட்ட நாள்... இன்று முதல்வராக செல்கிறார்" - பத்திரிகையாளர் டி.வி.சோமு

தனது சொந்த தொகுதி மக்களை காண பெரம்பூர் புறப்பட்டார் முதல்வர் விஜய்

🔴LIVE : பிரசார வாகனத்தில் பெரம்பூர் செல்லும் CM விஜய் | தொடர் நேரலை CM Vijay | Perambur