தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கு : மாணவனின் தந்தையின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் மாணவனின் தந்தை டாக்டர் வெங்கடேசனின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், மாணவனின் தந்தை டாக்டர் வெங்கடேசனின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வெங்கடேசனின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக மீண்டும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணையில் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர் வெங்கடேசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்