தமிழ்நாடு

தமிழகத்தில் நீட் தேர்வு தொடக்கம் - 1.17 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் நீட் தேர்வு தொடங்கியது. 14 நகரங்களில் உள்ள மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தந்தி டிவி

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கியது. தமிழகத்தில் 14 நகரங்களில் நடைபெறும் தேர்வில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் பங்கேற்கின்றனர். சென்னை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை, கோயம்புத்தூர், கரூர், திருவள்ளூர் , கடலூர், நாமக்கல் , காஞ்சிபுரம், வேலூர் , கன்னியாகுமரி , தஞ்சாவூர் ஆகிய 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகு முககவசம் அணிந்த மாணவர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்