தமிழ்நாடு

நீட் இல்லாதபோது, எவ்வளவு முறைகேடு நடந்திருக்கும் - பொன். ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு கெடுபிடிகளை, மேலும், கடுமையாக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நீட் தேர்வு கெடுபிடிகளை, மேலும், கடுமையாக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, நாகர்கோவில்-வடசேரி பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை மாணவர்கள், ஆள்மாறாட்டத்தில் ஈடுபடவில்லை என்றும், செல்வாக்கு படைத்த குடும்பங்களை சேர்ந்தவர்களே முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு வைத்த பிறகு மோசடிகள் வெளிவருவதாக கூறிய அவர், நீட் தேர்வு இல்லாத காலத்தில் எவ்வளவு மோசடிகள் நடத்திருக்கும் என்றார். இந்த அனுபவங்களை கொண்டு, நீட் தேர்வு நடைமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்