மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக தேனி மருத்துவக் கல்லூரியில் படித்த சென்னை மாணவர் சிக்கினார். சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் நீட் தேர்வில் இடைத்தரகர்கள் மூலம் பல்வேறு முறைகேடு நடந்தது அம்பலமானது. இதனை தொடர்ந்து, மூன்று மாணவர்கள், ஒரு மாணவி கைதாகினர். இந்த நிலையில் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வடமாநிலங்களை சேர்ந்த 8 மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக 94438-84395 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு சிபிசிஐடி போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இவர்கள் தமிழக மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.