தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை - விசாரணை

thanthitv

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகள் ரோஷிணி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாமக்கல்லில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இன்று தருமபுரியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் நீட் தேர்வை எழுத இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் ரோஷிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரோஷிணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த பாலக்கோடு போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

#BREAKING || Nellai | பிரபல ரவுடி கோபியை சுட்டுப்பிடித்த போலீஸ் - விடிந்ததும் பரபரப்பு

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்

Tiruppur Subramaniam |Kollywood | ஆதரவு இல்லை.." - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பால் பரபரப்பு