தமிழ்நாடு

நீட் தேர்வால் பாதிப்பு - தமிழ்வழியில் படித்தோர் எண்ணிக்கை சரிவு

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின்னர் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வது கடுமையான சரிவை கண்டுள்ளது என்ற அதிர்ச்சி புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின்னர் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வது கடுமையான சரிவை கண்டுள்ளது என்ற அதிர்ச்சி புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.

மருத்துவ படிப்பில் அனைத்து இடங்களும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே நிரப்பப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தாலும், நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை திமுக அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களுக்கும், ஏழை எளிய மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் முடிவில், நீட் தேர்வுக்கு பின்னர் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வது கடுமையான சரிவை கண்டுள்ளது என்ற அதிர்ச்சி புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.

2014-15 கல்வியாண்டில் தமிழ்வழியில் படித்த 481 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இதுவே 2015 - 16 கல்வியாண்டில் 456 ஆகவும், 2016 - 17 கல்வியாண்டில் 438 ஆகவும் இருந்துள்ளது. ஆனால் நீட் தேர்வுக்கு பிறகு 2017- 18 கல்வியாண்டில் 41 மாணவர்களும், 2018- 19 கல்வியாண்டில் 88 மாணவர்களும், 2019- 2020 கல்வியாண்டில் 58 மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி