நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சிறையில் உள்ள சென்னையை சேர்ந்த மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே போல் சிறையில் உள்ள மாணவர் ராகுல் அவரது தந்தை டேவிஸ் தரப்பிலும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராக அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.