தமிழக மாணவர்களுக்காக ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய வடமாநிலங்களை சேர்ந்த 8 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளின் புகைப்படத்தை புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், தேனி மருத்துவ கல்லூரியில் படித்த சென்னை மாணவர் உட்பட 3 மாணவர்களும், ஒரு மாணவியும் கைதாகினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வடமாநில இளைஞர்கள், தமிழக மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய தெரியவந்துள்ளது. இவர்களை பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக 94438-84395 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு சிபிசிஐடி போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.