தமிழ்நாடு

நீட் மரண இழப்பீடு - உயர்நீதிமன்றம் அதிருப்தி

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது, தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

நீட் தேர்வு தற்கொலைகள் தொடர்பாக, வழக்கறிஞர் சூரியபிரகாசம், நீதிபதி கிருபாகரன் அமர்வில் முறையிட்டார். அப்போது, நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு செயல்படுத்தாதலேயே மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்து வருவதாகவும், தற்கொலைகளை தடுப்பதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதை கேட்ட நீதிபதிகள், தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளதாக தெரிவித்தனர். மாணவர்கள் தற்கொலைகளை அரசியல்வாதிகள் பெரிதுபடுத்தக் கூடாது எனவும், அப்போது தான் தற்கொலைகள் குறையும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்