தமிழ்நாடு

நீட்- மதுரை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு : உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மனுத்தாக்கல்

நீட் விவகாரத்தில், சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது, வரும் 20-ஆம் தேதி விசாரணை நடக்கிறது.

தந்தி டிவி

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்குமாறு மதுரை உயர் நீதிமன்ற கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

அதில், நீட் தேர்வு அறிவிப்பாணை வெளியிட்டபோதே மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதுவோர், மொழி பெயர்ப்பில் குழப்பம் ஏற்பட்டால், ஆங்கில கேள்விகளின் அடிப்படையில் பதிலளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு ஏற்புடையது அல்ல என்றும், இதனை அமல்படுத்தினால் ரேங்க் பட்டியலை முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டி இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மனு மீது வரும் 20ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்