தென்காசியை சேர்ந்த துரைராஜ் என்பவர் இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலை அமைக்க வேண்டும் என்ற விதியை மீறி, விருதுநகர் முதல் நெல்லை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில்10 ஆண்டுகளாக புதிய சாலை போடாமல் புறக்கணிக்கப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார். இதனால், இந்த சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதிக்க கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் மற்றும் நெடுஞ்சாலை மதுரை மண்டல அலுவலர் உள்ளிட்டோர் இது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.