தமிழ்நாடு

எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி...

100 ரயில் நிலையங்கள் மற்றும் 100 தேசிய கொடிகள் என்ற திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

தந்தி டிவி
மத்திய அரசின் 100 ரயில் நிலையங்கள் மற்றும் 100 தேசிய கொடிகள் என்ற திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. சென்னை, எழும்பூர் ரயில் நிலைய முகப்பில் 100 அடி உயரம் உள்ள கம்பத்தில் 24 மணி நேரமும் பறக்க கூடிய 30 அடி நீளமும், 20 அகலமும் கொண்ட தேசிய கொடியை எழும்பூர் ரயில் நிலைய துணை மேலாளர் அன்பழகன் ஏற்றி வைத்தார். தென்னக ரயில்வே கூடுதல் கோட்ட மேலாலாளர் மனோஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்பு படையினர், எழும்பூர் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 மாதத்திற்கு முன்பு தேடியக்கொடி ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்