தமிழ்நாடு

நாசவேலைக்கு திட்டமிட்ட 7 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் : தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் உட்பட நாடு முழுவதும் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டவர்களில், 7 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் அளித்து, புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நாகப்பட்டினத்தை சேர்ந்த 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் இருந்து டெல்லிக்கு நாடுகடத்தப்பட்ட 14 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், விசாரணையை துரிதப்படுத்துவதற்காக, சிறையில் உள்ள 7 நபர்களை காவலில் எடுக்க முடிவு செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், சென்னை, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டி, ஏழு பேரையும், 5 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு