தமிழ்நாடு

வளைச்சி போட நினைத்த நபர் - ``கைய வச்ச நடக்குறதே வேற'' அலறவிட்ட நரிக்குறவர் பெண்கள்..பரபரப்பு காட்சி

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நரிக்குறவர்கள் வழிபட்டு வந்த கோயிலை தனிநபர் அகற்ற முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருப்புக்கு அருகேவுள்ள அரசு புறம்போக்கு இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் உரிமைகோரி வருவதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஓம் சக்தி படத்தை வைத்து வழிபாடு நடத்தியதுடன் கோவில் கட்ட கற்களை வைத்துள்ளனர். அந்த கற்களை குமார் தரப்பினர் வீசியதால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வருவாய்த்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில் கோட்டாசியரிடம் நரிக்குறவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே