தமிழ்நாடு

நாங்குநேரி இடைத்தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் மனு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுயேட்சை வேட்பாளர்கள் என 6 பேர் இணைந்து, தேர்தல் செலவின பார்வையாளரிடம் மனு அளித்துள்ளனர்.

தந்தி டிவி
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர்கள் என 6 பேர் இணைந்து, தேர்தல் செலவின பார்வையாளரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் நாங்குநேரி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, அதிமுக மீது களக்காடு, திருநெல்வேலி தாலுகா நிலையத்தில், புகார் இருப்பதாக கூறியுள்ளனர். அதேபோல், காங்கிரஸ் மீது, மூலக்கரைபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்த 28 லட்சத்தை தாண்டி அதிமுகவினர் 59 லட்சமும், காங்கிரஸ் 34 லட்சமும், ஹரிநாடார் 32 லட்சமும் செலவு செய்துள்ளதாக மனுவில் கூறியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்