தமிழ்நாடு

2 வயது குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள சின்னகாகாவேரி பகுதியில் 2 வயது குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலி.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள சின்னகாகாவேரி பகுதியை சேர்ந்த சண்முகம், நந்தினிதேவி தம்பதியினருக்கு 2 குழந்தைகள். கடந்த 45 நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக, அவர்களின் 5 மாத குழந்தை உயிரிழந்தது. இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு 2 வயது மகள் ஷன்மிதாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, பரிசோதித்தபோது பன்றி காய்ச்சல் என மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளித்து வந்த நிலையில், இன்று 2 வயது குழந்தை ஷன்மிதா ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தாள். கடந்த 2 மாதத்தில் ஒரேவீட்டில் 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு