நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சரத், தனது நண்பருடன் வாழப்பாடிக்கு, இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஹெல்மல்ட் அணியாமல் சென்ற இருவரையும், வாழப்பாடி காவல் நிலையம் அருகே போலீசார் தடுத்துள்ளனர். இருசக்கர வாகனத்தை சிறிது தூரம் தள்ளி நிறுத்தியதால் ஆத்திரமடைந்த போலீசார், சரத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் உதட்டில் காயம் அடைந்த மாணவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து புகார் அளித்தும் போலீசார் வழக்கு பதியவில்லை என மாணவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.