நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வேலைப்பார்த்து வந்த ஆசிரியர் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் பாய்ச்சல் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்ட ஆசிரியரை தங்கள் ஊருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.