நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், முறைகேடாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த பிரியாணி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். பரமத்தி வேலூர் நான்கு ரோட்டில் உள்ள பிரியாணி கடையில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் . சோதனை செய்த போலீசார் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 470 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கடை உரிமையாளர் பத்மநாபனை கைது செய்து , போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.