தமிழ்நாடு

மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்

கணவனை ஒரு வாரமாக காணாத விரக்தியில் மகனை கொன்ற தாய், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

* நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓட்டுநராக பணி புரிந்து வந்த கிருஷ்ண மூர்த்தி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூளை சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.

* இதனிடையே வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், கடந்த ஒரு வாரமாக காணாமல் போயுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால், மனைவி செல்வி மனமுடைந்து இருந்துள்ளார்.

* இந்நிலையில் செல்வி, தனது கணவர் இறந்திருப்பாரோ என எண்ணி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது 6 வயதான மகன் காமேஷ் கழுத்தில் கயிற்றால் இறுக்கி தூக்கில் தொங்க விட்டு, பின்னர் தானும் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

* தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் 2 பேரின் சடலத்தை கைப்பற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்