முட்டை விலை குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தை கோழிப்பண்ணையாளர்கள் முற்றுகை இட்டனர். நாமக்கல்லில் நேற்று ஒரே நாளில் முட்டை, விலையை, 15 காசுகள் குறைத்து இக்குழு அறிவித்தது. இது பெரும் இழப்பை ஏற்படுத்துவதாக கூறி கோழிப்பண்ணையாளர்கள் முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.