நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 15 காசுகள் விலை சரிவடைந்துள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டைவிலை 3 ரூபாய் 50 காசுகளில் இருந்து 3 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செலவை விட முட்டை விற்பனை விலை குறைவாக உள்ளதாக பண்ணையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.