நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், அதிகாலை நடனப் பயிற்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தெருநாய் ஒன்று கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது... சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் முயன்றும் அந்த நாயை அங்கிருந்து விரட்ட முடியவில்லை... இறுதியில் ரத்த வெள்ளத்தில் இருந்த அந்த பெண் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் அட்டூழியத்தை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.