நாமக்கல் மாவட்டத்தில் தென்னை அதிக அளவில் பயிரிடப்பட்டு வரும் நிலையில், ஒரு விவசாயி 5 மரத்தில் இருந்து மட்டுமே நீரா பானம் இறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நீரா பானம் எடுக்க கூடுதல் தென்னை மரங்களை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு, தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விவசாயிகள் மின் இணைப்பு பெறக் கட்டணம் இரண்டரை லட்சம் என அறிவித்து உள்ளதையும் திரும்ப பெற வேண்டும் என்றும் நாமக்கல் விவசாயிகள் கோரியுள்ளனர்.