தமிழ்நாடு

ATM கொள்ளை கும்பலை பிடித்த தமிழக காவல் துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

தந்தி டிவி

ATM கொள்ளை கும்பலை பிடித்த தமிழக காவல் துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார். நாமக்கல்லில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தலைமையிலான குழுவினரை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டினார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக திருச்சி சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டுச்சென்றார். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில், முதல்வரின் வாகனம் விமான ஓடுதளம் வரை செல்ல உள்ளதால், அவரது வாகனத்தை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் சோதனை செய்து அனுப்பினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்