தமிழ்நாடு

நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு, மேலும் 3 வாரம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ள நளினி, மகளின் திருமண ஏற்பாடுகள் முடிவடையாததால், மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், நளினியின் கோரிக்கையை சிறைத்துறை ஐ ஜி நிராகரித்துள்ளதாகவும், இது அரசின் தீவிர பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, நளினி பரோலை நீடிக்க அரசுக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், கால அவகாசம் குறைவாக இருப்பதாகக் கூறி நளினியின் பரோலை மேலும் 3 வாரம் நீட்டித்து உத்தரவிட்டனர். இதன்மூலம் நளினியின் பரோல் செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்