வடசேரி காவல்நிலை ஆய்வாளர் சேவியர் பெர்னாண்டஸ் வாகன தணிக்கையின் போது, தாயுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி, தேவையின்றி வெளியே வரக்கூடாது என எச்சரித்துள்ளார். இதனால் காவல் ஆய்வாளருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த ஆய்வாளர், இளம்பெண்ணை ஆபாசமாக திட்டி, தாக்க முயன்றார். அந்த பெண்ணின் தாயார், தனது மகளை ஆய்வாளரின் தாக்குதலில் இருந்து பாதுகாத்தார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.