தமிழ்நாடு

மகன் படிப்பிற்காக கடன் வாங்கிய தம்பதி சுமை தாளாமல் தூக்கு போட்டு தற்கொலை

நாகர்கோவில் அருகே மகன் படிப்பிற்காக கடன் வாங்கிய தம்பதி கடன் சுமை காரணமாக தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் பீச்ரோடு பகுதியை சேர்ந்த வேலப்பன் என்பவர் தனது மகனின் படிப்பு செலவிற்காக சுய உதவிக்குழு மற்றும் சிலரிடம் கடனாக பணம் பெற்றுள்ளார். வாங்கிய பணத்தையும் அதற்கான வட்டியையும் கட்ட முடியாமல் தவித்து வந்த பெற்றோர், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு இவர்களின் வீட்டின் அருகே துர்நாற்றம் வீசியதை அறிந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வீட்டில் போலீசார் பார்த்தபோது, இறந்த நிலையில் தூக்கில் தொங்கிய வேலப்பன் மற்றும் அவரின் மனைவி அமுதாவின் உடலை கைப்பற்றினர். இவர்களது உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்