நாகை அருகே அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து கல்வி சீர் வழங்கினர். குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது. ஊர்பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வரதராஜபுரம் கோயிலில் மாணவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பரிவட்டம் கட்டி ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர்.