தமிழ்நாடு

ரூ.500 கள்ளநோட்டு மாற்றிய பெண் கைது

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றிய பெண்மணியை வியாபாரிகள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றிய பெண்மணியை வியாபாரிகள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கண்ணன் என்பவரது கடைக்கு, வந்த பெண்மணி ஒருவர் 40 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு 500 ரூபாய் கொடுத்து மீதி தொகையை பெற்றுச் சென்றுள்ளார். அதன்பின்னர், அப்பெண்மணி கொடுத்த 500 ரூபாய் நோட்டு கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இந்நிலையில் கடைக்கு வந்த அதே பெண்மணி 80 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிவிட்டு கடை உரிமையாளர் கண்ணணிடம் 500 ரூபாய் கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்டு கடை ஊழியர்கள் அப்பெண்மணியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். கள்ள நோட்டுகளை வழங்கிய அந்த பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்